ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு

3 hours ago 1

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்றோடு நிறைவடைய உள்ள நிலையில், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் மாலை 6 மணிக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று மாலை 6 மணி முதல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் தொடர்பான பரப்புரையோ, கூட்டமோ நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, சினிமா மற்றும் இதர வழிமுறைகளில் பிரச்சாரம் செய்யக்கூடாது.

குறிப்பாக மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்புதல், சமூக வலைதளங்கள் வாயிலாக பிரச்சாரம் மோற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடகூடாது. மாலை 6 மணிக்குள் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண மண்டபம், சமூதாய நல கூடம், விடுதி, விருந்தினர் இல்லங்களில் வெளியாட்கள் இல்லாததை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 6 மணியோடு முடிவுக்கு வருகிறது.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article