திண்டுக்கலில் மரம் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு..!!

3 hours ago 1

திண்டுக்கல்: திண்டுக்கலில் மரம் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது சித்தப்பா சேவியர் இவர்கள் இருவரும் தனி தனியாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த பழமையான புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது.

அப்போது அவ்வழியாக வந்த குணசேகரன் மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குணசேகரன் உயிரிழந்தார். இதனை அடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரங்களை அகற்றி அவரது உடலை மீட்டனர். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குணசேகரனுடன் வந்த உறவினர் சேவியர் சற்று தொலைவு தள்ளி வந்ததன் காரணமாக அவர் உயிர்தப்பினார்.

The post திண்டுக்கலில் மரம் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article