ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு; சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கினர்

1 week ago 8

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ெதாடர்ந்து திமுக முன்னிலை பெற்று வருகிறது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதையொட்டி திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் திமுகவின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால், அண்ணா அறிவாலயம் திமுக தொண்டர்களால் களைக்கட்டியது. இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது அவருக்கு திமுக வர்த்தகர் அணி துணை ெசயலாளர் வி.பி.மணி இனிப்பு வழங்கினார். இதனை பெற்று கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு; சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article