சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுகழகம் வேட்பாளராக திரு.வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரின் வி.சி.சந்திரகுமார் மாபெரும் வெற்றிக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பாடுபடும் என்பதை மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம்: முத்தரசன் appeared first on Dinakaran.