ஈரோடு அருகே ஆசிட் லாரியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் இருவர் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு

2 days ago 4

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியின் போது இரண்டு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

அப்போது டேங்கர் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும் போது 3 ஊழியர்கள் மயக்கம் அடைந்தனர். மயங்கி விழுந்த யுவனேந்தல் 55), சக்திவேல் (52) இருவர் உயிரிழந்தனர். செல்லப்பன் (52) உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளார்.

ஐதராபாத்தில் இருந்து அலுமினியம் குளோரைடு ஏற்றி வந்த லாரி, திருப்பூரில் சரக்கை இறக்கிவிட்டு காலிங்கராயன்பாளையம் பகுதியில் சுத்தம் செய்தபோது துயரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பவானி அருகே லட்சுமி நகர் அடுத்த கோன் வாய்க்கால் பகுதியில் செயல்பட்டு வரும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 

The post ஈரோடு அருகே ஆசிட் லாரியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் இருவர் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article