ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 406 பேர் படுகாயம்..!!

2 weeks ago 5

ஈரான்: ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 406 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் 406 பேர் காயமடைந்ததாக ஈரான் அரசு தகவல் தெரிவித்தது.

ஈரான் துறைமுகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து

துறைமுகத்தில் கண்டெய்னர் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

100 அடி உயரத்துக்கு வெடித்துக் கிளம்பிய கரும்புகை

வெடி விபத்தால் 100 அடி உயரத்துக்கு கரும் புகை எழும்பியது. கண்டெய்னரில் இருந்த தீப்பற்றக்கூடிய பொருள் வெடித்துச் சிதறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. வெடி விபத்தை தொடர்ந்து அருகில் இருந்த வாகனங்கள் பற்றி எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

பயங்கர வெடி விபத்து – கட்டடங்கள் இடிந்தன

பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தில் அருகில் இருந்த கட்டடங்கள் இடிந்தன; வாகனங்கள் நொறுங்கின. வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

The post ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 406 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article