ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி : முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு

1 month ago 9

மும்பை :இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், உலக நாடுகளில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை என்பதால், சரிவிலிருந்து தப்பிய நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதும் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1244 புள்ளிகள் சரிந்து 83,022 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி தற்போது 295 புள்ளிகளில் சரிவுடன் 25,507 புள்ளிகளில் 5 வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன.வங்கித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாகன தயாரிப்பு நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் ஆகி வருகின்றன. பங்குச் சந்தையில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ டாடா ஸ்டீல், எஸ்பிஐ ஓ.என்.ஜி.சி. போன்ற சில பங்குகள் மட்டும் உயர்ந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் ,ஏசியன் பெயிண்ட்ஸ், எல் அண்ட் டி ,ஆக்சிஸ் பேங்க், மகீந்திரா அண்ட் மகீந்திரா ,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி, கோட்டக் மகீந்திரா பேங்க் ,ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவற்றின் பங்குகள் இறங்குமுகத்தில் உள்ளன. கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி : முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article