ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

3 months ago 15

மாஸ்கோ,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்று வருகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், ரஷியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், மத்திய கிழக்கில் நீடித்து வரும் சூழ்நிலையை பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் அணுக பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதேவேளை, மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article