ஈரானுக்கு கொடுக்கும் பதிலடி மரண அடியாக இருக்கும்.. இஸ்ரேல் ராணுவ மந்திரி தகவல்

3 months ago 21

ஜெருசலேம்:

இஸ்ரேல் மீது சமீபத்தில் ஈரான் சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டன. இதனால் இஸ்ரேல் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், பதிலடி கொடுத்தால் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் இரு நாடுகளிடையே போர் மூளும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், ஈரானுக்கு கொடுக்கும் பதிலடி மரண அடியாக இருக்கும் என இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவ வீரர்களுடனான சந்திப்புக்கு பிறகு ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தனது எக்ஸ் தளத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அதில், "ஈரான் மீதான எங்கள் தாக்குதல் மிக மோசமானதாகவும் , துல்லியமாகவும், ஆச்சரியம் அளிக்கும் வகையிலும் இருக்கும். இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் அதற்கு உரிய விலை கொடுப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article