ஈசிஆரில் காரில் பெண்களை வழிமறித்து மிரட்டிய வழக்கில் கைதான 4 பேரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

1 month ago 3

சென்னை: சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து மிரட்டிய வழக்கில் கைதான 4 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. 4 பேரையும் பிப். 14 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து மிரட்டிய வழக்கில் மீதமுள்ள 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்தி சென்று சில இளைஞர்கள் அத்துமீரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி 4‌ பேரை கைது செய்த நிலையில் அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த வாலிபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த சம்பவம் நடந்தபோது காரில் இருந்த வாலிபர்கள் மதுபோதையில் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதான 4 பேரையும் சோழிங்கநல்லூர் நீதிமன்றம் மேஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் அனைவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மொத்தம் 7 பேருக்கு தொடர்புள்ள நிலையில் மீதமுள்ளவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

The post ஈசிஆரில் காரில் பெண்களை வழிமறித்து மிரட்டிய வழக்கில் கைதான 4 பேரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article