ஈகுவடார் நாட்டில் 55 நாட்கள் நடுக்கடலில் சிக்கி தவித்த மீனவர்கள் பத்திரமாக மீட்பு

4 hours ago 2

லிமா,

தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் இருந்து மீன்பிடி படகு ஒன்று புறப்பட்டது. 5 மீனவர்களுடன் சென்ற அந்த படகு கடந்த ஜனவரி மாதம் சேதம் அடைந்தது. இதனால் வீடு திரும்ப முடியாமல் மீனவர்கள் நடுக்கடலில் சிக்கிக்கொண்டனர். எனவே அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பக்கத்து நாடான ஈக்வடாரின் கலபகோஸ் தீவு அருகே 5 மீனவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பெரு நாட்டுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். 55 நாட்கள் நடுக்கடலில் சிக்கி தவித்த அவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Read Entire Article