இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

1 week ago 4

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்து விட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.

இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பாஜ அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா 2024, வக்பு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையில் உள்ளது. இந்த சட்டத் திருத்தம் வக்பு சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என ஒன்றிய அரசு கூறினாலும், அந்த ஷரத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானதுதான். எனவே, ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.

The post இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article