
பெங்களூரு,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) உள்ள விஞ்ஞானி/ என்ஜினீயர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 320 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இஸ்ரோ வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
தேர்வு நடத்தும் நிறுவனம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ-ஐ.சி.ஆர்.பி)
காலி பணி இடங்கள் : 320
பதவி : விஞ்ஞானி/என்ஜினீயர் (எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்-இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்)
கல்வி தகுதி : பி.இ., பி.டெக். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம்
வயது : 16-6-2025 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்)
தேர்வுக் கட்டணம் : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 திருப்பி அளிக்கப்படும்.
சம்பளம் : மத்திய அரசின் 7 வது ஊதிய கமிஷன் லெவல் 10-ன் படி சம்பளம் வழங்கப்படும். மாதம் ரூ.56,100-வரை சம்பளம் கிடைக்கும்.
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம் (தமிழ்நாடு) : சென்னை
விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-6-2025
தேர்வு அறிவிப்பினை படிக்க : https://www.isro.gov.in/Careers.html