புதுடெல்லி,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது.
இஸ்ரோவின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.நாராயணன், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.,எஸ்.சியின் இயக்குனரக பணியற்றியுள்ளார். வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.