மும்பை : இஸ்ரேல் நிறுவனம் – அதானி குழுமம் இடையே செமிகண்டக்டர் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. உள்நாட்டில் வணிகரீதியாக செமிகண்டக்டர் தேவை எவ்வளவு என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10 பில்லியன் டாலரில் மராட்டியத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரேல் நிறுவனத்துடன் அதானி குழுமம் தற்காலிகமாக பேச்சுவார்த்தையை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
The post இஸ்ரேல் நிறுவனம் – அதானி குழுமம் இடையே செமிகண்டக்டர் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தம்!! appeared first on Dinakaran.