இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படவில்லை: எகிப்து விளக்கம்

2 months ago 16

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது..காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறியுள்ள இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றி அந்த அமைப்பிற்கு ஆதரவாக உள்ள ஹிஸ்புல்லா மீதும் தாக்குதலை முன்னெடுக்கிறது. இஸ்ரேல். 

. இதற்கிடையே சுமார் 1½ லட்சம் கிலோ வெடிமருந்துகளுடன் இஸ்ரேல் ராணுவத்துக்கு சொந்தமான எம்.வி. கேதரின் கப்பல் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே இந்த ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக எகிப்து செயல்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.

Read Entire Article