இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை நாளை விடுதலை செய்யும் ஹமாஸ்

3 months ago 9

 காசா முனை,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசா முனைக்கு பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் , காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த போரில் காசா முனையில் 48 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் பிடியில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமாகவும் இஸ்ரேல் மீட்டது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட பணய கைதிகளில் சிலரின் உடல்களையும் இஸ்ரேல் மீட்டுள்ளது. இதனிடையே, ஓராண்டுக்குமேல் நீடித்துவந்த போர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை பாலஸ்தீனியர்கள் 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பதப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு நாளை விடுதலை செய்ய உள்ளது. பணய கைதிகளில் 3 ஆண்களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலிய பணய கைதிகள் யாஹர் ஹரன் (வயது 46), அலெக்சாண்டர் ருபெனோ (வயது 29), சஹொய் டிகெல் ஷென் (வயது 36) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு நாளை விடுதலை செய்கிறது.

இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். 

Read Entire Article