இளையோர் கலை விழாவில் கட்டிமேடு அரசு பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தேர்வு

4 weeks ago 8

 

திருத்துறைப்பூண்டி, டிச.20: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா மற்றும் போட்டிகள் அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இளையோர்களுக்கான அறிவியல் மேளா தனிநபர் மற்றும் குழு நிகழ்ச்சி நடந்தது.

குழு நபர் மற்றும் தனிநபர் அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் மோதிலால் பிரசாத், முகம்மது அஜ்மல், வாஃபிக் ஆகியோர் கட்டிமேடு அரசு மேல்நிலை பள்ளியின் சார்பில் கலந்து கொண்டனர். இவற்றில் தனி நபர் பிரிவில் மாணவர் சா. வாபிக் மாநில அறிவியல் மேளா போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

தேர்வு பெற்ற மாணவரை கட்டிமேடு ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் முனாப், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி தேன்மொழி, தலை மை ஆசிரியர் மு.ச. பாலு மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்ட முகுந்தன், தனுஜா, மற்றும் ஆசிரியர் ராஜா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்க ப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கவியரசன் செய்திருந்தார்.

The post இளையோர் கலை விழாவில் கட்டிமேடு அரசு பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article