இளையோர் ஒருநாள் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து... தொடரை கைப்பற்றிய இந்தியா

4 hours ago 1

வொர்செஸ்டர்,

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் அடித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஆர்.எஸ். அம்ப்ரிஷ் 66 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஏஎம் பிரஞ்சு மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 31.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 211 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் அது ஆறுதல் வெற்றியாகவே அமைந்து.

முடிவில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 12ம் தேதி தொடங்குகிறது.

Read Entire Article