
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் ஜானிக் சின்னர் (இத்தாலி) , பல்கேரியாவை சேர்ந்த டிமிட் ரோவை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார். இதனால் சின்னர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.