இளம் வீரர்களுக்கான அற்புதமான அகாடமியாக ஐ.பி.எல் உள்ளது - பட்லர்

2 weeks ago 2

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.

பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜியோ ஹாட் ஸ்டார் வழங்கும் சிறப்பு தொடரான "ஜென் கோல்ட்" நிகழ்ச்சியில், குஜராத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பட்லர் குஜராத் அணியுடனான பயணம், பழைய அணித் தோழர்களுடனான நட்பு, சுப்மன் கில்லின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஆரம்ப அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

அதிகப்படியான அழுத்தமும், எதிர்ப்பார்ப்புகளும் இருக்கும் சூழ்நிலையில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி இது ஒரு சிறந்த வாய்ப்பு. வெளிநாட்டு வீரர்களாக நாங்கள் அவர்களின் அழுத்தத்தை உணர முடியாது. ஆனால், அவர்கள் அதை சிறப்பாக கையாளுகிறார்கள்.

சுப்மன் கில் மிகவும் சிறந்த வீரராகவும், அமைதியான கேப்டனாகவும், அனைவருடனும் தொடர்பு வைத்து கொள்ளும் ஒரு சிறந்த நபராகவும் உள்ளார். ஐ.பி.எல். தொடர் இளம் வீரர்களுக்கான ஒரு அற்புதமான அகாடமி போல் உள்ளது. சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

ராஜஸ்தான் அணியில் பல ஆண்டுகள் ஆடி அருமையான நினைவுகளை உருவாக்கிய பின் குஜராத் அணியில் விளையாடுவது வித்தியாசமாக உள்ளது. இது அனைத்தையும் புதிதாகவும், சுவாரசியமாகவும் வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article