ஊட்டி, மார்ச் 21: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குல்முகமது பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவரது வீட்டிலேயே சிறு தோட்டம் அமைத்து வண்ண வண்ண பூக்களை வளர்த்து வருகின்றனர். இவர்களது வீட்டு தோட்டத்தில் அரிய வகை நிஷா காந்தி எனப்படும் பிரம்ம கமலம் செடிகள் வளர்த்து வருகிறார். அழியும் பட்டியலில் உள்ள இவ்வகை செடிகளை கடந்த பல ஆண்டுகளாக பாதுகாத்து வளர்க்கப்பட்டுள்ள வரும் நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய பிரம்ம கமலம் மலர்கள் தற்போது அரிய வகை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குகின்றன.
பெரும்பாலும் இவ்வகை மலர்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே பூக்கக்கூடிய நிலையில் தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ளது. தென் அமெரிக்கா நாட்டின் மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கம்மலம் மலர்கள் இலங்கை நாட்டின் சொர்க்க பூ என அழைக்கப்படுகிறது. மலர்களின் இளவரசி என்றும் அழைக்கப்படும் பிரம்ம கமலம் மலர் உதகையில் உள்ள வீட்டு பூங்காவில் பூத்துள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
The post இளம் சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்கும் பிரம்ம கமலம் மலர்கள் appeared first on Dinakaran.