தேவையானவை:
அரிசி – 1 கப்,
இளநீர் – 1½ கப்,
ஏலக்காய் – 1,
கிராம்பு – 2,
நீளமாக நறுக்கிய வெங்காயம் – 1,
இஞ்சி, பூண்டு – விழுது 2 தேக்கரண்டி,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு தாளித்து, பின் இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் அரிசி சேர்த்து வாசனை வரும் வரை சிறு தீயில் வறுத்து, இளநீர் ½ கப் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி 4 (அ) 5 விசில் வரும் வரை விட்டு பின் கீழே இறக்கி விசில் நீங்கியப் பின் மூடியைக் கழற்றி நன்றாக கலக்கவும். கமகம ‘இளநீர் பொங்கல்’ ரெடி. விரும்பினால் புதினா சேர்க்கலாம்.
The post இளநீர் பொங்கல் appeared first on Dinakaran.