இலவச வீட்டுமனை பட்டா ரத்தை கண்டித்து குடியேறும் போராட்டம்: உசிலம்பட்டி அருகே பரபரப்பு

1 month ago 15

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததை கண்டித்து பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, தொட்டப்பநாயக்கனூர் கிராமப் பகுதியில் (சர்வே எண் 532/5ஏ மற்றும் 533/5ஏ) வீடு கட்டுவதற்காக, பட்டியல் பிரிவு மக்களுக்கு, கடந்த 1998ல் 208 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு பாதை வசதி இல்லாதததால், வீடு கட்ட முடியாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பட்டாக்களை இ.பட்டாக்களாக மாற்றியபோது 100க்கும் அதிகமான பட்டாக்களை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புடன் இணைந்து, பட்டா வழங்கப்பட்ட இடத்தில் நேற்று குடியேறும் போராட்டம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ‘இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்ததை கண்டித்தும், மீண்டும் பட்டா வழங்கி வீடுகள் கட்ட தேவையான உதவி செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 

The post இலவச வீட்டுமனை பட்டா ரத்தை கண்டித்து குடியேறும் போராட்டம்: உசிலம்பட்டி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article