இலவச மருத்துவ முகாம்

3 weeks ago 5

 

காஞ்சிபுரம்,அக்.21: சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை, காஞ்சிபுரம் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை, காஞ்சிபுரம் லைப்கேர் மருத்துவமனை மற்றும் குமார் கண் மருத்துவமனை, இந்திய பல் மருத்துவச் சங்கம் காஞ்சிபுரம் கிளை ஆகியவற்றுடன் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை தனியார் பள்ளி வளாகத்தில் நடத்தினர். காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் மருத்துவ முகாமை தொடக்கி வைத்து பேசியதுடன் முகாமையும் பார்வையிட்டார்.

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையின் இதயவியல் பேராசிரியர் நாகேந்திர பூபதி தலைமை வகித்து அவரது குழுவினர் இதயநோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் லைப்கேர் மருத்துவமனையின் இயக்குநர் அன்புச்செல்வன், பல்லவன் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் டிஜிபி மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ் வரவேற்று பேசினார். கண் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் பல் மருத்துவ பரிசோதனைகளும், பல் மருத்துவர் கணேஷ் தலைமையில் பல் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

The post இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article