நெல்லை: நெல்லையில் 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெல்லை மேற்கு புறவழிச்சாலை 1 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.1304 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.309.05 கோடி மதிப்பிலான 20 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.1,061 கோடியில் உபரிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது.
The post 75000 பேருக்கு நலத்திட்டஉதவி வழங்கினார் முதல்வர் appeared first on Dinakaran.