மீண்டும் வரப்போகிற டபுள் டக்கர் பஸ்.. புதியதாக 625 மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு.!!

3 hours ago 1

சென்னை: சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டை, கணிசமாக குறைக்க மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னைக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஏசி, தாழ்தள பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் டபுள் டக்கர் பேருந்து மீண்டும் வலம் வரப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சிகள் கடந்த 2023ம் ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சாரத்தால் இயங்கும் 625 புதிய மின்சார டபுள் டக்கர் பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரையை அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்த பிறகு பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மீண்டும் வரப்போகிற டபுள் டக்கர் பஸ்.. புதியதாக 625 மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு.!! appeared first on Dinakaran.

Read Entire Article