இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

3 hours ago 1

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

தனுஷ்கோடி அருகே நான்காம் மணல் தீடையில் மனித நடமாட்டம் இருப்பதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை காலை இந்திய கடலோர காவல் படையினர் மணல் தீடையில் ஆவணங்களின்றி தனியாக நின்றிருந்த இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேரை மீட்டு, தனுஷ்கோடியில் மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மெரைன் போலீஸார் நான்கு பேரையும் விசாரணைக்காக மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Read Entire Article