ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் ராமர் கோயில் தெருவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 25 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் ஷீட்டால் மூடப்பட்டு உள்ளது. மழை காலங்களில் சிமென்ட் ஷீட் வழியாக வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுவதால் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே அங்கன்வாடி குழந்தைகளின் கல்விக்காக பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை மனு அளித்து வந்தனர். ஆனாலும் இதுவரை புதிய கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைந்து அங்கன்வாடிக்கு புதிய மையம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.