காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதையில் போலீசை தாக்கினார் வாலிபர்

3 hours ago 1

பூந்தமல்லி: வளசரவாக்கத்தில் காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குடிபோதையில் போலீசை தாக்கிய வாலிபரை மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைத்து, போலீசார் எச்சரித்து அனுப்பினர். சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் உடனிருந்த பெண் ஒருவரை தாக்கியுள்ளார்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ரோந்து பணியில் இருந்த வளசரவாக்கம் போலீசார் வந்தனர். அப்போது இளம்பெண்ணை தாக்கிக் கொண்டிருந்த போதை ஆசாமியை பிடித்தனர். விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டவர் மதுரையைச் சேர்ந்த கோகுல் ராஜன் (23) என தெரியவந்தது. போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது போதையில் இருந்த அந்த நபர் தலைமை காவலர் சுனில் என்பவரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், தொடர்ந்து நடந்த விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக சாலையில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போதையில் இருந்த கோகுல் ராஜனை எச்சரித்து மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பி வைத்தனர்.

The post காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதையில் போலீசை தாக்கினார் வாலிபர் appeared first on Dinakaran.

Read Entire Article