இலங்கைக்கு கடத்த பதுக்கிய மான் கொம்பு, கஞ்சா பறிமுதல்

1 week ago 7

மண்டபம்: இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபத்தில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்பு, கஞ்சா பார்சலை தனிப்பிரிவு போலீசார் கைப்பற்றினர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள்கள் கடத்துவதாக மண்டபம் தனிப்பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர் பகுதியில் சுற்றித்திரிந்த மண்டபம் பகுதியை சேர்ந்த முகமது கைப் (20) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் 5 கிராம் அளவில் 14 பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் கொடுத்த தகவலின் பேரில், மண்டபம் மரைக்காயர் தெருவை சேர்ந்த சதாம் உசேன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 12 கிலோ கஞ்சா பார்சல்கள், மான் கொம்பு இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மண்டபம் தண்டையல் தெரு முகைதீன் வசீர் (21), சல்மான் கான், முகமது கைப், 16 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தல் பொருள்களை பதுக்கி வைத்திருந்த சதாம் உசேனை தேடி வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்த பதுக்கிய மான் கொம்பு, கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article