இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் நியூசிலாந்து அணி

3 months ago 12

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் (வெள்ளைப்பந்து) விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன், கான்வே, டேரில் மிட்செல் உள்ளிட்ட 8 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டபி, லாக்கி பெர்குசன், ஜாக் பௌல்க்ஸ், டீன் பாக்ஸ்கிராப்ட், மிட்ச் ஹே, ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் சுமித், இஷ் சோதி, இஷ் சோதி மற்றும் வில் யங்

Mitchell Santner takes captaincy reins on an interim basis in Sri Lanka More from #SLvNZ https://t.co/8dUDEUa1CH pic.twitter.com/l7HkRACrgg

— ICC (@ICC) October 23, 2024
Read Entire Article