
கொழும்பு,
தாய்லாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். இலங்கை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை மந்திரிகள் விஜிதா ஹெராத், நலிந்த ஜெயடிசா, அனில் ஜெயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிசானந்தா அபேசேனா உள்ளிட்டோர் பிரதமர் மோடியை நேரில் வந்து வரவேற்றனர்.
தனது இலங்கை பயணம் தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கொழும்புக்கு வருகை தந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.