இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்

1 month ago 5

ராமேசுவரம்: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்.

கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 23 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். டிச. 23-ல் ஊர்காவல்துறை நீதிமன்றம், இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் மீண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்பைடயில் 20 மீனவர்களை விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 3 பேருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தது.

Read Entire Article