இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

3 months ago 7

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மேலும், அவர்கள் செல்லும் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் அபராதமாக இலங்கை நீதிமன்றம் விதித்து வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்திட கோரி முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.

The post இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article