இலங்கை அணிக்கு எதிராக சதம்: ஸ்மிரிதி மந்தனா சாதனை

17 hours ago 2

கொழும்பு,

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தராப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடமும், இலங்கை 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை சொந்தமாக்கி 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மந்தனா 116 ரன்களும், ஹர்லீன் தியோல் 47 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த போட்டியில் சதம் அடித்த இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சாதனை படைத்துள்ளார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெக் லேனிங் (15), சுசி பேட்ஸை (13) தொடர்ந்து ஸ்மிரிதி மந்தனா (11) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் . 

Read Entire Article