புதுடெல்லி: இறந்தவர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் முறையான இறப்பு சான்றிதழுடன் விண்ணப்பித்தால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடைமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் இறந்தவர்கள் பலரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வாக்காளர் பட்டியலை பிழையில்லாத ஆவணமாக மாற்றும் முயற்சியின் கீழ் இறப்பு பதிவுகள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து இறப்பு பதிவு தரவுகளை டிஜிட்டல் முறையில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட இறப்புகள் குறித்த தகவல்களை வாக்காளர் பதிவு அதிகாரிகள் சரியான நேரத்தில் பெற்று வாக்காளர் பட்டியலில் இருந்து தாமாக நீக்குவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கள ஆய்வின் போது இத்தகவல்கள் வாக்குச்சாவடி அதிகாரிகள் மூலம் மீண்டும் சரிபார்க்கப்படும். தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்பில் வரிசை எண், பகுதி எண் போன்ற தகவல்கள் பெரிய எழுத்தாக அச்சிடவும் முடிவும் செய்யப்பட்டுள்ளது.
Namesofdeceasedpersons-voterlists-throughdigitaldeath-registrationdata-ElectionCommission-action
The post இறப்பு பதிவு டிஜிட்டல் தரவுகள் மூலம் வாக்காளர் பட்டியலில் தாமாக இறந்தவர்கள் பெயர் நீக்கப்படும்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.