இறந்தவரின் பர்சில் இருந்து ரூ.3 ஆயிரம் திருடிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

1 day ago 2


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளியின் பர்சில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் திருடிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதுல் கோகோய் (27). தொழிலாளி. கடந்த மாதம் 19ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே ரயிலில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து இறந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய ஆலுவா போலீசார் பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான தொழிலாளியின் செல்போன், பர்ஸ் உள்பட உடமைகள் ஆலுவா போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

அந்த பர்சில் 8 ஆயிரம் ரூபாய் இருந்தது. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜிதுல் கோகோயின் உடமைகளை வாங்குவதற்காக அவரது உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது பர்சில் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்தனர். இதில் அன்றைய தினம் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சலீம் பர்சில் இருந்து பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுதொடர்பான விசாரணைக்குப் பின் சப்-இன்ஸ்பெக்டர் சலீமை எஸ்பி வைபவ் சக்சேனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post இறந்தவரின் பர்சில் இருந்து ரூ.3 ஆயிரம் திருடிய எஸ்.ஐ. சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article