இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல்: வங்காளதேசத்தில் நடிகை கைது

4 days ago 5

டாக்கா,

வங்காளதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலின் துறையில் இருந்து பின்னர் திரைத்துறையில் அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே, வங்காளதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரியும், மேஹ்னா ஆலமும் காதலித்து வந்துள்ளனர். அந்த தூதரக அதிகாரிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

அதேவேளை, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தூதரக அதிகாரியான தனது காதலனிடம் மேஹ்னா ஆலம் கேட்டுள்ளார். ஆனால், மேஹ்னாவை திருமணம் செய்ய தூதரக அதிகாரி மறுத்துவிட்டார்.

இந்நிலையில், டாக்காவில் உள்ள வீட்டில் இருந்த மேஹ்னா ஆலமை வங்காளதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது அதிரடியாக நுழைந்த போலீசார், மேஹ்னா ஆலமை கைது செய்தனர். வங்காளதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, மேஹ்னாவின் கைதுக்கு வங்காளதேசத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

Read Entire Article