இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..

2 months ago 10
திருப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவுமுதல் தொடர் மழை பெய்து வருவதால் திருமலையில் படிக்கட்டுப் பாதை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி சுவாமி தரிசனத்துக்குச் சென்றனர். தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல்களில் பக்தர்கள் ஒதுங்கினர். திருப்பதி மலையில் வனப்பகுதியில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், நூற்றுக்கணக்கான குட்டைகளில் எல்லாம் தண்ணீர் நிரம்பி வழிகிறது. திருமலையில் இருந்து வெளியேறும் தண்ணீர், மாலாடிகுண்டத்தில் அருவியாகக் கொட்டுகிறது.
Read Entire Article