இரவு 7 மணி வரை சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

2 hours ago 2

சென்னை,

தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. 

இந்த சூழலில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையக்கூடும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப்பகுதியை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 7 மணி வரை சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article