தயிருக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை உண்டு. அதனால்தான் பரவலாக அது உபயோகத்தில் இருக்கிறது. தயிரில் உள்ளடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சீராக நடைபெற உதவும். குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
* பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உஷ்ணத்துடன் காணப்படும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
* சிலர் தயிரை இரவு உணவிலும் சேர்த்துக்கொள்வார்கள். இரவு நேரத்தில் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த சமயத்தில் தயிரை சேர்த்துக் கொண்டால் சளி பிரச்னை உருவாக வாய்ப்பிருக்கிறது.
* அதிலும் இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது சளியை அதிகப் படுத்திவிடும்.
* மோர் எல்லா நேரத்திற்கும், எல்லோருக்கும் ஏற்றது. மோரில் சிறிதளவு மிளகுத் தூள் கலந்து பருகலாம். அது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் என்பதால் சைனஸ் உள்ளவர்கள் உடல் வெப்பநிலை சீராகப் பாதுகாக்கப்படும்.
– எஸ். ரமணி
* ஏலக்காயை சரியாக அரைக்க முடியாது. ஒரு துளி நெய்யில் 2 நிமிடம் நிறம் மாறும் வரை வறுத்து, மிக்ஸியில் பொடிசெய்து, டப்பாவில் போட்டு மூடி வைத்து, தேவைப்படும்போது உபயோகித்துக்கொள்ளலாம்.
* முற்றிய தேங்காயை துண்டுகளாகப் போடுவது சிரமம். தேங்காயை ஃபிரிசரில் 15 நிமிடங்கள் வைத்து, தண்ணீரில் கழுவி, கத்தியால் கீறிவிட்டால், சுலபமாக வந்துவிடும்.
* தேங்காய்ப் பால் கலந்து இனிப்பு அப்பம் செய்தால், ஸ்பான்ஞ் போல இருக்கும்.
* அடுப்பில் சாம்பார், ரசம் பொங்கி வழியாமல் இருக்க, பாதி கொதி வரும்போது 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டால் பொங்கி வராது.
* கத்தரிக்காய் வேக வைக்கும் போது, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால், கத்தரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும்.
* 2 ஸ்பூன் சோளமாவை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, தோசைமாவுடன் கலந்து தோசை வார்த்தால், தோசை மாவு கல்லில் ஒட்டாமல், தோசை நன்றாக சுடச்சுட வரும்.
– விஜயலட்சுமி
The post இரவில் தயிர் சாப்பிடலாமா? appeared first on Dinakaran.