சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவாக சென்னை கிழக்கு மாவட்டம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கழகத் தலைவரின் 72 வது பிறந்த நாளையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் உன்னதமான திட்டமானது 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சிறப்புமிகு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 20.2.2025 அன்று கொளத்தூரில் மதிப்புமிகு அண்ணியார் துர்கா ஸ்டாலின் திருக்கரங்களால் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். அந்த வகையில் 24ஆம் நாள் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி 30வது நாள் உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி. செழியன் 50வது நாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தொடர்ந்து 75வது நாளான இன்று (5.5.2025), கொளத்தூர் கிழக்கு பகுதி, கொளத்தூர், 70வது வார்டு, ரமணா நகர், கௌதமபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் 68வது வார்டு, பெரியார் நகர் மருத்துவமனை அருகில், கார்த்திகேயன் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்.
இச்சிறப்புமிக்க “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” திட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினந்தோறும் காலை 7.00 மணியளவில் கலந்து கொண்டு பசியாக வரும் பொது மக்களுக்கு, பசியாற காலை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். இச்சிறப்புமிக்க திட்டமானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காலை உணவு அருந்திவிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரை வாழ்த்தி வருகிறார்கள்.
“அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் திட்டமானது இன்றுடன் (5.5.2025) தற்பொழுது 75 நாள் கடந்து, 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக துறைமுகம், வி.க நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகள் என கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடலின் செயல்களில் ஒன்றாக இத்திட்டம் நடத்துவதில் சென்னை கிழக்கு மாவட்டம் பெருமை கொள்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” பெயரில் ஒரு நாளைக்கு 1000 நபர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு காலை உணவுகளை வழங்கி வருகிறார். சென்னை கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருமதிப்பிற்குரிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, தொடர்ந்து இரண்டரை மாத காலத்திற்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகள் என்கின்ற வகையில் இலக்கிய நிகழ்ச்சி என்று எடுத்துக் கொண்டால் பொதுக்கூட்டங்கள், கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், வாழ்த்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், என்று பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக பசிப்பிணியை போக்கும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியை ஓராண்டு காலம் என்று முடிவு எடுத்து, பிப்ரவரி திங்கள் 20ஆம் தேதி மதிப்புமிகு அண்ணியார் துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்து இன்றைக்கு தினந்தோறும் இந்த காலை உணவு திட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றார்.
இன்று காலை கொளத்தூர் பகுதியில் இரண்டு இடங்களில் இந்த காலை உணவு பரிமாறப்பட்டது. இந்த உணவை பொருத்தவரை மிக நேர்த்தியாக செய்யப்பட்ட ஒன்று சூடாகவும் சுவையாகவும் மக்களுக்கு பயன்பெறுகின்ற வகையில் அற்புதமாக அந்த உணவு சமைக்கப்பட்டிருக்கின்றது. வடை, இட்லி, பொங்கல், இடியாப்பம், அதேபோல் கேசரி என்று பல்வேறு வகைகளான அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இன்று மட்டுமல்லாது இதுவரை வழங்கப்பட்ட 75 நாட்களுமே கூட பல வகைகளில் இந்த உணவு என்பது பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வெறும் ஏழை எளியவர்களுக்கு என்றும் இல்லாமல் யாருக்கெல்லாம் வயிறு இருக்கின்றதோ எல்லாம் உண்ணுகின்ற வகையிலான ஒரு அற்புதமான உணவாக இன்றைக்கு நாம் இங்கே பார்த்தோம் விளையாட்டு வீரர்கள் வாகனங்களிலே சென்று கொண்டு இருப்பவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வந்து வாங்கி செல்வது இப்படி பல தரப்பினரும் பயன்படுகின்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முன்நின்று நடத்திக் கொண்டிருக்கின்றார்.
நிகழ்ச்சிகள் பொதுவாக தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது எங்கேயாவது தொய்வு ஏற்படும் ஆனால் தொடர் நிகழ்ச்சிகள் தொய்வு இல்லாமல் நடத்துகிற ஒரு மிகச்சிறந்த மாவட்ட செயலாளர் என்கின்ற வகையில் சேகர்பாபு தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றார் அவர் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் தோய்வும் இருக்காது எந்த விதமான தொய்வு இல்லாமல் அந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக நடத்தக்கூடியவர் இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் கூட ஒழுங்கமையப்பட்டிருக்கின்ற பாத்திரங்கள் ஒவ்வொருவரும் கையுறையுடன் அந்த உணவு பரிமாற வேண்டும் என்று என்கின்ற நேர்த்தி உணவு வழங்கப்படுகின்ற பொழுதே “அன்னம் தரும் அமுத கரங்கள்” என்ற தலைப்பிலான ஒரு பாடல் ஒளிபரப்பு இப்படி பல்வேறு சிறப்புகளோடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே எல்லா நிகழ்ச்சியை காட்டிலும் மிகச் சிறப்பான நிகழ்ச்சி என்பதை மனமகிழ்ச்சியோடு பாராட்டுகளை நானும் சக மாவட்ட செயலாளர் என்கின்ற வகையில் இதை மிகுந்த மன நிறைவோடு பாராட்டி மகிழ்கிறேன்.
நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: நீட் வந்த நாள் முதலே குளறுபடிகள் தான் கடந்த ஆண்டு கூட உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாகியது அதுவும் குறிப்பாக ஒன்றிய அரசு நடத்துகின்ற இந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மட்டுமல்ல ஒழுங்கீனங்களும் குறிப்பாக மாணவ மாணவியர்களை சீரழிக்கும் வகையில் அவர்களுடைய கனவுகளை சீர்குழ்கின்ற வகையில் ஏராளமான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மாணவர்கள் குறிப்பாக தாலியை கழற்றி வைத்துவிட்டு போய் தேர்வு எழுத வேண்டும் என்ற விதிமுறைகளை இதுவரை வரலாறு காணாத ஒரு அத்துமீறல் இன்றைக்கு மாணவிகளின் தாலியை கழற்றி விட்டு வரவேண்டும் என்று சொல்வதெல்லாம் ஒரு சென்டரில் பார்த்தேன். கணவரே அவருடைய மனைவியின் தாலியை கழட்டிவிட்டு அந்த மையத்திற்குள் அனுப்பி வைக்கின்ற ஒரு மிகப்பெரிய துர்பாக்கிய நிலையை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.
நேற்றைக்கு பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் மரியாதைக்குரிய அம்மையார் கவர்னராக பணியாற்றிய தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், நீட் நீட்டாக நடந்து கொண்டிருக்கின்றது என்கின்ற வகையில் ஏதோ புலமை மிக்க வார்த்தைகளை சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார்கள். நீட் என்பது இவர்களால் தான் வந்தது என்பது நாடறியும், நீட் தேர்வினால் இன்றைக்கு 40 மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது என்பது நாடறியும் நீட் விளக்கிற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடுத்துக் கொண்டிருக்கின்ற நடவடிக்கைகள் நாடறியும் என்றாலும் இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களால் எடுத்து வரப்படுகின்ற அந்த நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக ஒன்றிய அரசு இருப்பதோடு மட்டுமல்லாது அதை நியாயப்படுத்துகின்ற வகையிலும் பேசி தீருவது என்பது உண்மையில் நாகரிகமான ஒன்றாக இருக்க முடியாது.
ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் கமிட்டி 10 சதவீதம் வரைக்கும் இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கலாமென்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சியாக இருக்கும் போது திமுகவின் கோரிக்கையாகவும் அது இருந்தது இப்பொழுது 7.5 தான் கொடுத்துள்ளோம் 10% ஆக உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதா குறித்த கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: அதாவது இத்தனை சதவீதம் தர வேண்டும் என்பது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் இதே மருத்துவக் கல்லூரியில் 15 சதவீத அன்றைக்கு தந்தார்கள் நீட் இல்லாத போது ஆனாலும் கூட அன்றைக்கு உயர்நீதிமன்றம் சார்பில் அதற்கு தடை விதிக்கப்பட்டது இது 2007-2008இல் நடந்தது உங்களுக்கு தெரியும் அதற்கு அப்புறம் ஏன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஒரு சமூகத்திற்காக தந்தார் அதுவும் இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது.
அதேபோல 7.5 சதவீதம் என்பது சட்டரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த 7.5 சதவீதத்தினால் பலனும் இருக்கின்றது என்கின்ற வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மருத்துவ கல்வி அதே போல் சட்டப் படிப்பு பொறியியல் துறை அனைத்து துறைகளிலும் 7.5 சதவீதத்தை கொண்டு வந்து கிராமப்புற மாணவர்களின் அந்த கல்வி ஆதாரத்திற்கு பெரிய அளவில் அன்றைக்கே உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இதை உயர்த்தி வேறு யாராவது நீதி மன்றங்களுக்கு சென்று சட்டரீதியான சிக்கல் அதிலே வந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கின்றது.
இந்த நீதி அரசரின் பரிந்துரையே 10 சதவீதம் வரை கொடுக்கலாம் என்ற பொழுது ஏன் பரிசினை மேற்கொள்ள தாமதப்படுகிறது, இதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: எல்லாவற்றையும் சட்டரீதியான நுணுக்கங்களை ஆராய வேண்டிய அவசியம் இருக்கின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நிச்சயம் சட்ட விதிகளை பின்பற்றி எந்த நடவடிக்கையானாலும் எடுப்பார்கள். அவசரக்கோளத்தில் அள்ளி தெளித்த கதையாக கடந்த காலங்களில் போடப்பட்ட ஆணைகள் எப்படி கிடப்பில் இருக்கின்றதோ, நாம் நன்றாக அறிவோம். எனவே அந்த வகையில் இதை தெரிந்து சரியான முடிவை எடுப்பது என்பது முதலமைச்சர் அவர்களுடைய கடமை.
திமுக அளித்த பொய் வாக்குறுதியால் நீட் உயிரிழப்புகள் தொடர்வதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: திமுக வந்த உடனே ஏற்கனவே தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவர்களும் பல்வேறு பேட்டிகளின் வாயிலாக இதை தெளிவுபடுத்திருக்கின்றார். நீட் விலக்கு பெறுவோம் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் விளக்கை பெறுவோம் என்கின்ற வகையிலான அறிவிப்பு இருக்கின்றது. அதுவும் கூட யார் கையில் இருந்து பெற வேண்டும் என்றால் ஒன்றிய அரசிடமிருந்து தான் முதல்வராக வணக்கத்திற்குரிய நம்முடைய தளபதி பொறுப்பேற்றதற்கு பிறகு நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் குழு அமைத்து அந்த குழுவின் பரிந்துரையை சட்டமன்றத்தில் வைத்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டம் முன்வடிவை அந்த தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக அனுப்பாத பல்வேறு முறைகளில் அதற்காக போராடி மீண்டும் இரண்டாவது முறையும் சட்டமன்றத்தில் வைத்து இரண்டாவது முறை வைக்கப்பட்ட அந்த தீர்மானம் மேதகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுடைய அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர்கல்வித்துறை, மருத்துவம், கல்வித் துறை, ஆயுஷ் அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளுக்கு கிளரிஃபிகேஷன் என்கின்ற வகையில் 8 முதல் 10 முறை அனுப்பிவைத்து, ஒரு 8 முதல் 10 முறையும் கிளாரிஃபிகேஷன் சரியாக இங்கே இருக்கின்ற சட்ட வல்லுநர்களோடு தொடர்ந்து செய்ததற்கு பிறகு கூட மேதகு குடியரசு தலைவர் அதை மறுத்து அனுப்பி இருக்கின்றார். இதலே அக்கறை உள்ளவர்களாக இன்றைக்கு சொல்லிக்கொண்டு திரிபவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் போன்றோர் நீட் விளக்கு பெறுவதற்கு இந்த அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டுமே தவிர, இது போன்று சொல்லித் திரிவது அவர்களுடைய கையாலாகாத தனத்தை காட்டுகிறது. இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள், பகுதி செயலாளர்கள் எ.நாகராஜன், ஐசிஎப்.வ.முரளிதரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் தாவூத்பீ, ஸ்ரீதணி, யோகபிரியா, அமுதா, சாரதா, பகுதி துணைச் செயலாளர் பெரம்பூர் ராஜன், வட்ட செயலாளர்கள் அன்பரசன், ஆதவன் மணி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” 75வது நாளான இன்று கொளத்தூர் பகுதியில் காலை உணவு வழங்கி சிறப்பித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் appeared first on Dinakaran.