இரவில் கடுங்குளிர்; பகலில் கொளுத்தும் வெயில்.. இருபருவ கால நோய்களும் தாக்கும் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

18 hours ago 2

ஈரோடு: ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இரவு மற்றும் அதிகாலையில் கடும் குளிரும், பகலில் அதிகபட்ச வெப்பநிலையும் நிலவுவதால் இரு பருவ தடுப்பு முன்னெச்சரிக்கை பின்பற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு மற்றும் அதிகாலையில் கடும் குளிருடன் அவ்வப்போது பனிப்பொழிவு நிலவுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 18 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், கடந்த சில தினங்களாக பகலில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது.

இதனால் காலை 8 மணி வரை கடும் குளிரால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள் அதன் பின்னர் கொளுத்தும் வெயிலால் வீடுகளிலேயே முடங்கும் நிலை உள்ளது. திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலும் இதே காலநிலையை நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருபருவ கால நோய்களும் தாக்கும் சூழல் இருப்பதாக கூறும் மருத்துவர்கள் குளிரால் சாதாரண சளி, காய்ச்சல் முதல் சுவாச கோளாறுகள் வரை ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர்.

கொளுத்தும் வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு, ஸ்டோக், இருதய பாதிப்பு, தோல் நோய்கள் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர். பாதிப்புகளை தவிர்க்க இருபருவ காலத்திற்கான முன் தடுப்பு முறைகளையும் பின்பற்றுவது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். கோடை காலம் தொடங்கும் முன்னரே தகிக்கும் வெயிலில் தவிக்கும் மக்கள் எதிர்வரும் கோடையை எப்படி சமாளிப்பது என தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

The post இரவில் கடுங்குளிர்; பகலில் கொளுத்தும் வெயில்.. இருபருவ கால நோய்களும் தாக்கும் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Read Entire Article