இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அயனாவரத்திலிருந்து சுரங்கப்பாதை தோண்டி பெரம்பூரை வந்தடைந்த ‘கல்வராயன்’ இயந்திரம்

2 days ago 3

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை `கல்வராயன்' இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும் இடம்பெற உள்ளன. இந்த வழித்தடத்தில் அயனாவரம், ராயப்பேட்டை உட்பட பல இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுகின்றன.

Read Entire Article