டெல்லி: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக ஏப்ரல்.28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்குகிறது. அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட ஆறு பேர் தனித்தனியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்தல் ஆணையம் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம். மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் திருப்தியடைந்த பிறகே விசாரணையை தொடங்க வேண்டும்.
இந்நிலையில் இரட்டை இலை விவகாரம் தொடர்பாக ஏப்.28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்குகிறது. அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல்.28 மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்தனர்.
The post இரட்டை இலை விவகாரம்: ஏப்.28ம் தேதி விசாரணையைத் தொடங்குகிறது தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.