சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல் என பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. பாஜக உடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்து விட்டன. தற்பொழுது எஸ்.டி.பி.ஐ. கட்சி எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் பேட்டி அளித்துள்ளார். பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டம். பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது?. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பாஜகவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில் அதிமுகவை கபிலிகரம் செய்திருக்கிறார்கள்.
பாஜகவை பொறுத்த வரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு. எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை. இந்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பாஜக தவம் கிடந்தார்கள்.
இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
The post அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல் என பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவிப்பு! appeared first on Dinakaran.