இரட்டை இலை வழக்கில் ஏப்.28-ம் தேதி இறுதி விசாரணை: இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

1 day ago 2

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்.28-ம் தேதி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் இறுதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில், பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனது செல்லாது. அவர் நடத்திய பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லாது.

கட்சி தலைமை பதவியை தொண்டர்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை பழனிசாமி மாற்றியது செல்லாது என ஓபிஎஸ், கட்சியில் தொண்டர்களாக இருந்த ராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகள் உரிமையியல் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன.

Read Entire Article