சென்னை: மாடி தோட்டம் அமைப்பது, இயற்கை வேளாண்மை குறித்து நடைபெறும் பயிற்சி வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் பிப்.27-ம் தேதி, மாடி தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.