திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்க நடவடிக்கை

2 hours ago 1

*அமைச்சர் எ.வ.வேலு நேரடி களஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் நேற்று நடந்த தூய்மை பணியை அமைச்சர் எ.வ.வேலு கள ஆய்வு செய்தார். அப்போது, கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற இலக்குடன் கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை அமைப்பாளராக கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.

தூய்மை அருணை திட்டத்திற்கு 4 மேற்பார்வையாளர்களும், 39 வார்டுக்கு 39 ஒருங்கிணைப்பாளர்களும், மாடவீதி தூய்மைப் பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும் ஒவ்வொரு வார்டுக்கும் 25 தூய்மைக் காவலர்கள் என ஆயிரத்தும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக உள்ளனர்.வாரம்தோறும் சம்பந்தப்பட்ட வார்டுகளை தூய்மைப்படுத்துதல், மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூர்வாருதல் போன்ற சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கிரிவலப் பாதையில் உள்ள 20 குளங்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெறும் தூய்மைப் பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று களஆய்வு செய்தார். மேலும், தூய்மை அருணை தன்னார்வலர்கள் அணியும் மஞ்சள் நிற சீருடை அணிந்து அவரும் களப்பணியில் ஈடுபட்டார்.

அதன்படி, அஜீஸ் காலனி, புதுத்தெரு, அம்பேத்கர் ெதரு, போளூர் மெயின்ரோடு, காந்தி நகர், புதுவாணியங்குளத் தெரு, சின்னக்கடை தெரு, மத்தலாங்குளத் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு நடைபெறும் தூய்மை பணிகள் மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.மேலும், கழிவுநீர் வடிகால்வாய்களை தூர்வாரி சீரமைக்கவும், பழுதடைந்துள்ள கால்வாய்களை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். அதோடு, கோடை காலம் தொடங்குவதால், அனைத்து வீதிகளிலும் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் கேட்டுக்கொண்டார்.

தூய்மைப் பணியில், தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள் டாக்டர் எ.வ.வே.கம்பன், கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், ஒருங்கிணைப்பாளர்கள் நேரு, துரை.வெங்கட், குட்டி புகழேந்தி, ஆறுமுகம், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article